இந்திய திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர். முருகதாஸ். இவர் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து படம் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக சல்மான் கானுடன் கைகோர்க்கவுள்ளார். அதற்கான அறிவிப்பு சமீபத்தில் தான் வெளிவந்தது.
இந்த நிலையில், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் குறித்து பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்ட விஷயம் தற்போது படுவைரலாகி வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் ஒரு முறை பிரபல தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில் படம் இயக்க கமிட்டாகியுள்ளார்.
சாப்பாட்டை கட் செய்த தயாரிப்பாளர்
அப்போது அவருக்கு 5 ஸ்டார் ஹோட்டலில் ரூம் போட்டு கொடுத்து டிஸ்கஷன் நடந்துள்ளது. அந்த நேரத்தில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ஒரு திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிபெறவில்லை.
படத்தின் தோல்வியை கேள்விப்பட்டவுடன் 5 ஸ்டார் ஹோட்டலில் உடனடியாக 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து ஏ.ஆர். முருகதாஸுக்கு செல்லும் உணவை கொடுக்க வேண்டும் என கூறிவிட்டாராம் தயாரிப்பாளர்.
இதன்பின் கையேந்தி பவனில் வாங்கி 5 ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்டாராம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ். இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.