தாய் ஷோபாவிற்காக பிரம்மாண்டமான கோவில் கட்டிய விஜய்.. புகைப்படத்தை பாருங்க

115

 

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது Goat திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை முடித்தபின் தன்னுடைய கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு பின் முழுமையாக அரசியலில் கவனம் செலுத்தவுள்ளார்.

நேற்று நடிகர் விஜய் சாய் பாபா கோவிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளிவந்தது. அவர் சீரடி சாய் பாபா கோவிலுக்கு சென்றுள்ளார். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது என கூறப்பட்டது.

தாய்க்காக கோவில்
ஆனால், அது அங்கு எடுக்கப்பட்ட புகைப்படம் கிடையாதாம். நடிகர் விஜய் தனது தாய் ஷோபாவிற்காக தனக்கு சொந்தமான நிலத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் சாய் பாபா கோவில் கட்டியுள்ளார்.

கொரட்டூரில் உள்ள தனது சொந்த நிலத்தில் தன்னுடைய தாய்க்காக விஜய் கட்டிய இந்த சாய் பாபா கோவிலின் கும்பாபிஷேகம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்துள்ளது. அங்கு விஜய் எடுத்துகொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

மேலும், கொரட்டூரில் விஜய் கட்டியுள்ள இந்த ஸ்ரீ சாய் பாபா மந்திர் கோவிலின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

SHARE