பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோவாக நடித்து பிரபலம் ஆனவர் அருண் பிரசாத். அவர் அந்த சீரியல் முடிந்த பிறகு வேறு எந்த புது சீரியலிலும் நடிக்காமல் தான் இருக்கிறார்.
எப்போது புது சீரியலில் நடிப்பீர்கள் என ரசிகர்கள் தொடர்ந்து அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
காதலி உடன்..
இந்நிலையில் நடிகர் அருண் பிரசாத் தனது காதலி உடன் போட்டிங் செல்லும் போட்டோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு இருந்தே அருண் பிரசாத் பிரபல சீரியல் நடிகை VJ அர்ச்சனா உடன் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் பிக் பாஸ் டைட்டில் ஜெயித்த அர்ச்சனா தான்.
அதனால் அருண் பிரசாத் உடன் இருப்பது அர்ச்சனா தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். அதை நிரூபிக்கும் வகையில் அர்ச்சனா சமீபத்தில் ஏற்காட்டில் ஹோட்டல் அறையில் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதனால் அருண் பிரசாத் – அர்ச்சனா காதல் உறுதியாகிவிட்டது என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.