இந்த வயதில் உனக்கு பொண்ணு கேட்குதான்னு தப்பா பேசினார்கள்.. பாலு மகேந்திரா மகள் வேதனை!!

130

 

இயக்குனர், ஒளிப்பதிவாளர், கதை ஆசிரியர், எடிட்டர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் பாலு மகேந்திரா.

தற்போது பிரபல இயக்குனர்களாக இருக்கும் பாலா, ராம், வெற்றி மாறன், சீனு ராமசாமி ஆகியோர் இவரது பட்டறையில் தான் உருவானவர்கள்.

மகள் வேதனை!!
சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பாலு மகேந்திராவின் வளர்ப்பு மகள் சக்தி மகேந்திரா பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், எனக்கு சினிமாவில் ஆர்வம் இருந்ததால் உறவினர் ஒருவர் பாலு மகேந்திராவிடம் அறிமுகம் செய்துவைத்தார். அவரை பார்க்க சென்ற போது, ‘மகளே உள்ளே வா’ என்று என்னை அழைத்தார். நானும் அம்மாவும் சென்றோம், சினிமாவில் ஆர்வம் இருக்கு என்று சொன்னோம், புகைப்படம் எடுத்து அனுப்பிவைத்தார்கள்.

அதன் பிறகு சில நாட்கள் கழித்து எங்களை திருப்பி அழைத்தார்கள். அப்போது எனக்கு பெண் குழந்தை இல்லை, பொண்ணு வளர்க்கணும் என்று ஆசை, இவங்கள பொண்ணாக பார்த்துக் கொள்ளட்டுமா என்று அம்மாவிடம் கேட்டார். 2010 ஆண்டில் இருந்து அவர் இறக்கும் வரை நான் அவருடன் இருந்தேன்.

அந்த சமயத்தில் எனக்கு வயது 11 இருக்கும். என்னுடைய அப்பா இறந்த சில மாதத்தில் அவர் என் மீது பாசமாக இருந்தது எனக்கு மிகவும் எமோஷ்னலாக இருந்தது. என்னை மிகவும் நன்றாக கவனித்துக்கொண்டார்.

இந்த வயதில் உனக்கு பொண்ணு கேட்குதான்னு எல்லாமே தப்பா பேசினார்கள், குடும்பத்திலும் அப்படி பேசினாங்க. இந்த விஷயம் எனக்கும் அவருக்கு தெரியும். எங்களது ரிலேஷன்ஷிப்பை யாருக்கும் புரியவைக்கணும் என்ற அவசியம் இல்லை என்று சக்தி மகேந்திரா கூறியுள்ளார்.

SHARE