தோனிக்கு ‘தல’ பட்டத்தை யார் கொடுத்தது தெரியுமா? பிரபலம் கூறிய விடயம்

122

 

சேப்பாக்கம் மைதானம் தோனிக்கு தல என்ற பட்டத்தையும், ரெய்னாவுக்கு சின்ன தல எனும் பட்டத்தையும் கொடுத்ததாக வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே தெரிவித்துள்ளார்.

‘தல’ தோனி
சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னாள் அணித்தலைவர் எம்.எஸ்.தோனி ‘தல’ என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.

ஐபிஎல் தொடர் பிரபலமான பின்னர் தான் அவருக்கு இந்த பெயர் வந்தது. அதேபோல் CSK அணியில் விளையாடிய சுரேஷ் ரெய்னா ‘சின்ன தல’ என்று அழைக்கப்படுகிறார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த பிரபல வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு ஒரு பட்டம் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

ஹர்ஷா போக்லே
அவர் கூறும்போது, ”சேப்பாக்கம் மைதானம் நிறைய பட்டங்களை கொடுத்துள்ளது. தோனிக்கு ‘தல’, ரெய்னாவுக்கு சின்ன ‘தல’.. இப்போது உங்களுக்கு ‘கிரிக்கெட் தளபதி’ என்ற பட்டம் கொடுக்க இதுதான் சரியான நேரமாக இருக்கும் என நினைக்கிறேன்” என்று ஜடேஜாவிடம் கூறினார்.

அதற்கு பதிலளித்த ஜடேஜா, ”இரண்டு பேரின் பட்டங்களுக்கும் ரசிகர்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். ஆனால், நான் இன்னும் அந்த அங்கீகாரத்தை பெறவில்லை. விரைவில் அதை எனக்கு கொடுப்பார்கள் என நம்புகிறேன்” என்றார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில், CSKவின் ரவீந்திர ஜடேஜா 4 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

SHARE