பெரும்பலான மக்களுக்கு கிரிக்கெட் மிகவும் பிடித்த விளையாட்டாக இருக்கின்றன.
கிரிக்கெட் மட்டுமன்றி கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் மீதும் அவர்களுக்கு தனி பிரியம் உள்ளது.
அந்தவகையில், இந்தியாவின் பணக்கார கிரிக்கெட் வீரர் யார் என்ற கேள்வி சமூகவலைத்தளங்களில் அதிகம் தேடப்பட்டு வருகின்றனர்.
இந்திய பணக்கார கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடிப்பவர் ஆர்யமான் பிர்லா.
இவர் தனது தனிப்பட்ட சொத்துக்களின் அடிப்படையில் இந்தியாவின் பணக்காரர கிரிக்கெட் வீரராக உள்ளார்.
இவர் மத்திய பிரதேச அணிக்காக ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். மேலும், உள்நாட்டு கிரிக்கெட்டிலும் இவர் சதம் அடித்துள்ளார்.
இவர் கடந்த 2018-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம்பிடித்தார். அவருக்கு அணியில் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் பயிற்சியில் அனைவருடன் பங்கேற்றார்.
இவர் ஆதித்யா பிர்லா நிறுவனர் குமார் மங்கலம் பிர்லாவின் மகன் ஆவார். இவரது பரம்பரை சொத்து சுமார் 70,000 கோடி இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.
ஃபோர்ப்ஸ் அறிக்கையின்படி, அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 1.5 லட்சம் கோடி ரூபாய்.
இந்நிலையில் அவரது சொத்துக்கள் மேலும் அதிகரித்துள்ளன. ஏனென்றால் பிர்லா குழுமத்தின் வணிகம் முன்பை விட தற்போது மேலும் அதிகரித்துள்ளது.