தோனி ரசிகர்கள் கூச்சலிட்டதால் காதுகளை மூடிக்கொண்ட ரசல்! அவர் கூறிய விடயம்

162

 

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தோனியின் துடுப்பாட்டத்தின்போது ரசிகர்கள் கூச்சலிட்டதால், KKR வீரர் ஆந்த்ரே ரசல் காதுகளை மூடிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது.

இப்போட்டியில் CSK அணியின் 17வது ஓவரில் தோனி களமிறங்கினார். அப்போது முதல் தோனியின் ரசிகர்கள் ஆரவாரமாக கூச்சலிட ஆரம்பித்தனர்.

தோனி முதல் பந்தை சந்திக்கும் வரை ரசிகர்கள் உற்சாகத்தில் கத்தினார். இதனால் பவுண்டரி எல்லைக் கோட்டின் அருகே நின்றிருந்த கொல்கத்தா வீரர் ஆந்த்ரே ரசல், தனது காதுகளை மூடிக் கொண்டார்.

தற்போது இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. போட்டிக்கு பின்னர் பேசிய ரசல், ‘உலகிலேயே மிகவும் அதிகமாக நேசிக்கப்படும் ஒரு கிரிக்கெட் வீரர் தோனிதான் என நினைக்கிறேன்’ என தெரிவித்தார்.

SHARE