கோர விபத்து : ஸ்தலத்தில் ஆசிரியர் பலி – குழந்தை படுகாயம்

96

 

ஏ9 வீதியின் ரம்பேவ பகுதியில் கார் ஒன்று கவனக்குறைவாக வீதியில் திரும்பியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

நேற்றுமுன்தினம் மதியம் 1.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வவுனியா நோக்கி பயணித்த அதிசொகுசு பேரூந்து காருடன் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர் பலி
விபத்தில் காரை ஓட்டிச் சென்ற ஆசிரியர் ஸ்தலத்திலேயே உயிரிழந்த நிலையில் அதில் பயணித்த 3 வயது குழந்தை படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE