மின் மற்றும் நீர் கட்டணம் செலுத்தும் பாவனையாளர்கள் கட்டணம் செலுத்துதல் மற்றும் பற்றுச்சீட்டு பெறுதல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மின்சார கட்டணம் மற்றும் நீர் கட்டணங்களை உள்ளூர் முகவர்கள் மற்றும் தபாலகங்களில் செலுத்தும் வாடிக்கையாளர்கள் இந்த விடயம் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
பணம் கையாடல்
சில இடங்களில் மக்களிடம் மின் கட்டணம் மற்றும் நீர் கட்டணத்திற்கான பணத்தை பெறும் தபாலக உத்தியோகத்தர்கள் மற்றும் உள்ளூர் முகவர்கள் பணத்தை மின்சார சபைக்கு செலுத்தாமல் குறித்த பணத்தை கையாடல் செய்வது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தபாலகங்கள், உப தபாலகங்கள் மற்றும் உள்ளூர் முகவர்களிடம் பணம் செலுத்தும் பொதுமக்கள் பற்றுச்சீட்டிணை உரிய வகையில் பரிசீலிக்கும் படியும் அல்லது இணைய வழி ஊடாக மின்சார சபை கிளை ஊடாகவோ கொடுப்பனவு கிடைக்க பெற்றமை தொடர்பில் உறுதிப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.