கொட்டகலை பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வீட்டின் அறையொன்றில் தீ பரவியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் கொட்டகலை (Kotagala) பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய பெண் என தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணை
தீக்காயங்களுக்குள்ளான பெண் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.