தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கிய நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங்.
இவரது நடிப்பல் கடைசியாக தமிழில் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்திற்கு முன் இவர் தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்.ஜி.கே போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.
இவருக்கு சமீபத்தில் பாலிவுட் பட பிரபலம் ஜாக்கி பாக்னானியை திருமணம் செய்துகொண்டார்.
புதிய தொழில்
திருமணம் செய்துகொண்ட ரகுல் ப்ரீத் சிங் இப்போது புதிய தொழிலை தொடங்க உள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், ஜதராபாத்தில் எனது முதல் உணவகத்தை திறப்பது சந்தோஷமாக இருக்கிறது. எல்லோருக்கு சத்தான, சுவையான உணவை வழங்க வேண்டும் என்ற நோக்கில் இந்த உணவகத்தை திறக்கிறோம்.
இங்கு பரிமாறப்படும் உணவு வகைகள் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் என பேசியுள்ளார்.