நடிகர் ரஜினிகாந்த் அடிக்கடி விரல்களை இப்படி செய்வது ஏன்?- இப்படியொரு சீக்ரெட்டா?

114

 

நடிகர் ரஜினிகாந்த், 1975ம் ஆண்டு கமல்ஹாசன் நடித்த அபூர்வ ராகங்கள் மூலம் தனது நடிப்பை தொடங்கியவர்.

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இப்போது ரஜினி வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு பிறகு அடுத்தடுத்தும் படங்கள் கமிட்டாகி வருகிறார்.

ரஜினி நடிப்பில் எவ்வளவு ஈடுபாடுடன் இருக்கிறாரோ ஆன்மீகத்திலும் அதிக ஈடுபாடு காட்டுவார்.

சீக்ரெட் விஷயம்
நடிகர் ரஜினிகாந்த் தன் கையின் கட்டை விரல் மற்றும் பெருவிரலை சேர்த்து முத்ரா ஒன்றை பின்பற்றுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அப்படி ரஜினி செய்வதற்கு பின்னால் என்ன விஷயம் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

ஒரு யோகா நிபுணர் இதுகுறித்து கூறுகையில், ரஜினிகாந்த் பின்பற்றும் கை முத்ரா சின் முத்ரா எனப்படும். அப்படி செய்யும்போது மூளை நரம்புகள் நன்றாக வேலைசெய்யுமாம், இதனால் நினைவாற்றல் அதிகமாகுமாம்.

மன அழுத்தத்தை இதனால் மூளை அழுத்தத்தை குறைக்கிறது. கோபம், தூக்கமின்மை, தலைவலி இவற்றையெல்லாம் நீக்குகிறதாம்.

இதனால் நாம் இந்த சின் முத்திரையில் வைத்து அமரும்போது நம்முடைய நரம்புகளுக்கு அமைதியை கொடுத்து கவனம் சிதறாமல் வைக்கிறது.

ரஜினி அப்படி தனது கைகளை வைப்பதற்கு பின்னால் இப்படி ஒரு நன்மை இருக்கிறதா என ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

SHARE