சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து 5 நிமிடங்களில் நியூயோர்க்கிற்கு சென்றடையலாம்: நவீன விமானத்தின் டெமோ வெளியீடு (வீடியோ இணைப்பு)

364
நாசா நிறுவனம் சாதாரண விமானங்களைக் காட்டிலும் 1000 மடங்கு வேகம் கொண்ட Horizons விமானங்களை வடிவமைப்பு செய்வதில் முனைப்புக் காட்டி வருகின்றது.இந்நிலையில் கூகுள் நிறுவனத்தைச் சேர்ந்த Clay Bavor என்பவர் ஏனைய சாதாரண விமானங்களின் வேகத்துடன் Horizons விமானங்களின் வேகத்தை ஒப்பிட்டு அறியக்
கூடிய வகையில் GIF கோப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.இதில் Boeing 747, SR-71 Blackbird ஆகிய விமானங்கள் 11,278 மீற்றர்கள் உயரத்தில் பறக்கும்போது காணப்படும் வேகத்துடன் Horizons விமானத்தின் வேகம்
ஒப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி Boeing 747 விமானம் மணிக்கு 550 மைல் வேகத்திலும், SR-71 Blackbird மணிக்கு 2,700 மைல் வேகத்திலும் பயணிக்கும்போது Horizons ஆனது மணிக்கு 36,000 மைல்கள் வேகத்தில் பயணிக்கக்கூடியதாகக் காணப்படுகின்றது.

இந்த வேகத்தில் பயணிக்கும்போது சான் பிரான்ஸிஸ்கோவிலிருந்து நியூயோர்க்கினை 5 நிமிடங்கில் சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE