குட் பேட் அக்லி படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கிறாரா அந்த சென்சேஷனல் நடிகர்!! எகிறும் எதிர்பார்ப்பு

107

 

அஜித் நடிப்பில் வெளியான மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் நடந்து வருகிறது.

தற்போது இப்படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து அஜித் 63 படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.

சமீபத்தில் இது தொடர்பான அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. தெலுங்கில் பிரபல நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

அஜித்தின் தீவிர ரசிகரான ஆதிக் ரவிச்சந்திரன், இப்படத்தை இயக்குவதால் ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியிருக்கிறது.

எகிறும் எதிர்பார்ப்பு..
இந்நிலையில் அனிமல் படத்தில் வில்லன் ரோலில் நடித்திருந்த பாபி தியோல் மற்றும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் உடன் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

மேலும் இப்படத்தில் நடிப்பு அரக்கன் எஸ் ஜே சூர்யா வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

SHARE