தளபதி விஜய்யின் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் ஒன்று கில்லி. கடந்த 2004ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தை இயக்குனர் தரணி இயக்கியிருந்தார்.
இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து திரிஷா ஜோடிக்க நடிக்க, பிரகாஷ் ராஜ் வில்லனாக நடித்திருந்தனர். ஹீரோவாக விஜய் ஒரு பக்கம் ஸ்கோர் செய்து வந்தால், ஹீரோவையே மிஞ்சும் அளவிற்கு தனது நடிப்பில் பட்டையை கிளப்பி இருப்பார் பிரகாஷ் ராஜ். அதனால் தான் இன்று வரை தமிழ் சினிமாவில் முத்துப்பாண்டி எனும் கதாபாத்திரம் நின்னு பேசுகிறது.
இப்படத்தில் மாபெரும் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணம் இசையமைப்பாளர் வித்யாசாகர். கொக்கர கொக்கர கோ, அஜூனாரு வில்லு, கில்லி டைட்டில் பாடல், அப்படி போடு என ஆல்பம் ஹிட் கொடுத்தார்.
ரீ-ரிலீஸ் வசூல்
கடந்த சில மாதங்களாகவே தமிழ் சினிமாவில் வெளிவந்த கல்ட் திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் ஆகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது கில்லி படத்தை வருகிற 20ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்கிறார்கள். இதற்கான புக்கிங் சமீபத்தில் துவங்கியது.
இந்த நிலையில், இதுவரை உலகளவில் ரூ. 1 கோடிக்கும் மேல் ப்ரீ புக்கிங் செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் ரீ-ரிலீஸ் பாக்ஸ் ஆபிஸில் ப்ரீ புக்கிங்கிலேயே வசூல் சாதனை படைத்துள்ளது விஜய்யின் கில்லி.