சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் நடிகை காயத்ரி யுவராஜ். சரவணன் மீனாட்சி, அரண்மனை கிளி, நாம் இருவர் நமக்கு இருவர் 2, மெல்ல திறந்தது கதவு என பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார்.
மேலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான Mr & Mrs கில்லாடிஸ் நிகழ்ச்சியில் தனது கணவர் யுவராஜ் உடன் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
வாழ்க்கையில் அடுக்கட்டம்
சமீபத்தில் தான் தங்களுடைய கனவு இல்லத்தை கட்டி முடித்தார் நடிகை காயத்ரி. வீட்டு கிரகபிரவேசத்தின் வீடியோ கூட வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வைரலானது. ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், தங்களின் வாழ்க்கையில் அடுத்தகட்டத்திற்கு காயத்ரி – யுவராஜ் தம்பதி நகர்ந்துள்ளனர். பிரம்மாண்ட வீட்டை தொடர்ந்து நடன பள்ளி ஒன்றை ஆரம்பித்துள்ளனர். நடன பள்ளிக்கு Rhythmic beat dance court என பெயர் வைத்துள்ளனர்.