ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால், ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பான விசாரணைகள் தொடர்பான தமது எதிர்கால நடவடிக்கைகள் குறித்து எழுத்து மூலம் தமக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கர்தினால் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேசிய மக்கள் சக்தி தமக்கு இதுவரை எழுத்துபூர்வமாக எதுவும் வழங்கவில்லை எனவும், ஆனால் ஏதோ வாய்மொழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ளதாகவும், எழுத்து மூலம் உறுதி மொழி தரப்படும் என நம்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்துமூல உத்தரவாதம்
எதிர்காலத்தில் தம்மைச் சந்திப்பதற்கு தேசிய மக்கள் சக்தி நேரமொன்றைப் பெற்றுள்ளதாகவும், அது பயனளிக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள பேராயர் இல்லத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கர்தினால் இதனைத் சுட்டிக்காட்டியுள்ளார்.