அனுமதி இன்றி பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு 782 வழித்தட அனுமதியை இலங்கை போக்குவரத்து சபையினர் வழங்கியதாக காரைநகர் தனியார் போக்குவரத்து பேருந்து உரிமையாளர் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இது குறித்து நேற்றையதினம் கவனயீர்ப்பில் ஈடுபட்ட சங்கத்தினர் கருத்து தெரிவிக்கையில்,
நாங்கள் 32 ஆண்டுகளாக இந்த சங்கத்தின் விதிகளுக்கு கட்டுப்பட்டு செயற்பட்டு வருகின்றோம். எமது வழித்தட பகுதிக்குள் இல்லாத ஒருவருக்கு வழித்தட அனுமதி வழங்கக் கூடாது என்று எமது யாப்பில் உள்ளது.
வழித்தட அனுமதி
இது எமது யாப்பில் மட்டுமன்றி எமது வடக்கு மாகாண இணையத்தின் யாப்பிலும் உள்ளது.
இந்நிலையில் எமது வழித்தடத்திற்குள் உள்ளடங்காத அராலி மத்தி பகுதியை சேர்ந்த பேருந்து உரிமையாளர் ஒருவருக்கு வழித்தட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனால் எமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. எமது அனுமதி இல்லாமல் இவ்வாறு இலங்கை போக்குவரத்து அதிகாரசபை செயற்படுகின்றமை வேதனையளிக்கிறது.
இது குறித்து நாங்கள் ஏற்கனவே இ.போ.ச அதிகாரசபைக்கு தெரியப்படுத்தினோம். இந்நிலையில் குறித்த பேருந்தின் உரிமையாளர் ஆளுநர் செயலகம், இ.போ.ச அதிகார சபை, வடக்கு மாகாண பிரதம செயலாளர் ஆகியோருக்கு முறைப்பாடு வழங்கியுள்ளார்.” என கூறியுள்ளனர்.