ஒன்றாரியோவில் சம்பள அதிகரிப்பிற்காக காத்திருக்கும் உதவி ஆசிரியர்கள்

109

 

ஒன்றாரியோவில் சம்பள அதிகரிப்பிற்காக உதவி ஆசிரியர்கள் தொடர்ந்தும் காத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒன்றாரியோ பதிவு செய்யப்பட்ட சிறுவர் பராய உதவி ஆசிரியர்களே இவ்வாறு சம்பள அதிகரிப்பிற்காக காத்திருக்கின்றனர்.

மாகாண அரசாங்கம் சம்பளங்களை அதிகரிப்பதாக வாக்குறுதி அளித்திருந்தது.

எனினும், இதுவரையில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் முதுல்வர் டக் போர்ட் தலைமையிலான அரசாங்கம் சம்பள அதிகரிப்பு வழங்குவதாக உறுதிமொழி வழங்கியிருந்தது.

மணித்தியாலமொன்றிற்கான சம்பளத்தை சுமார் 23.86 டொலர்களாக உயர்த்துவதற்கு உறுதியளிக்கப்பட்டிருந்தது.

எனினும் இதுவரையில் தமது சம்பளங்கள் அதிகரிக்கப்படவில்லை என ஆசிரிய உதவியாளர்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.

SHARE