கந்தளாய் (Kantale ) பகுதியில் வாகனம் மோதி யுவதி உயிரிழப்பு

84

 

வாகன விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்று (21.4.2024) காலை ரஜஎல வீதியின் கிளை வீதியில் இடம்பெற்றுள்ளது.

கந்தளாய் – ரஜஎல பிரதேசத்தில் வசித்து வந்த 19 வயதுடைய யுவதியே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

பொலிஸார் மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய, வருகையில், கிளை வீதியில் பயணித்த வேன் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி யுவதி மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த யுவதி கந்தளாய் வைத்தியசாலையில் (Kandalai Hospital) அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், விபத்தின் பின்னர் சாரதி தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் (Kandalai police) மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE