நாசர் மருத்துவமனைக்குள் 50 உடல்கள்; பரபரப்பை ஏற்படுத்திய தகவல்

99

 

காசாவின் நாசர் மருத்துவ கட்டிட தொகுதியில் இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்ட 50க்கும் அதிகமானவர்களின் உடல்களை மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலிய படையினரால் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டவர்களின் உடல்களே மீட்டுள்ளதாக சுகாதார பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாசர் மருத்துவமனையின்கொல்லைப்புறத்தில் இந்த உடல்களை மீட்டுள்ளதாக சிவில் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நாசர் மருத்துவ கட்டிட தொகுதிக்குள் இஸ்ரேலிய படையினர் புதைத்த புதைகுழிகள் காணப்படுகின்றன நேற்று 50க்கும் மேற்பட்ட தியாகிகளின் உடல்களை பார்த்து அதிர்ச்சியடைந்தோம் என சிவில் பாதுகாப்பு முகவர் அமைப்பின் பேச்சாளர் மஹ்மூட் பாசல் தெரிவித்துள்ளார்.

தேடுதல் நடவடிக்கையில் நாங்கள் தொடர்ந்தும் ஈடுபடுகின்றோம் கொல்லப்பட்ட தியாகிகளின் எண்ணிக்கையை அறிவதற்காக அனைத்து புதைகுழிகளும் தோண்டப்படுவதற்காக காத்திருக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த பெப்ரவரி மாத நடுப்பகுதியில் காசாவில் உள்ள நாசர் மருத்துவமனையில் கடும் மோதல்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

SHARE