அமெரிக்காவின் விருந்து நிகழ்ச்சியில் பயங்கர துப்பாக்கி சூடு ; 2 பேர் பலி

108

 

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் உள்ள ஆரஞ்சு மலையில் விருந்து நிகழ்ச்சியின் போது துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

விசாரணை
இந்த விருந்து நிகழ்ச்சியில் சுமார் 300 பேர் கலந்து கொண்டுள்ளதுடன் அப்போது திடீரென துப்பாக்கிச்சூடு நடந்ததில் விருந்து நிகழ்ச்சியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர்.துப்பாக்கிச்சூட்டில் பலர் கீழே விழுந்தனர்.

போலீசார் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதுடன் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

SHARE