படப்பிடிப்பில் விஜய்க்கு குடை பிடித்த பிரபல நடிகை.. யார் தெரியுமா! இதோ புகைப்படம்

100

 

தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக தளபதி 69ல் நடிக்கவுள்ளார்.

இப்படத்தை பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்கவுள்ளார் என கூறப்படுகிறது. இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடிப்பில் 2007ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் அழகிய தமிழ் மகன். இப்படத்தை பரதன் இயக்கியிருந்தார். முதல் முறையாக இப்படத்தில் தான் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குடை பிடித்த நடிகை
பெரிதும் எதிர்பார்ப்பில் வெளிவந்த அழகிய தமிழ் மகன் திரைப்படம் ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றத்தை கொடுத்தது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யிடம் கலாட்டா செய்வது போல் விஜய்க்கு குடை பிடித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஸ்ரேயா. இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

SHARE