பட்டானிச்சூர் பகுதியில் விபத்து ; காயமடைந்தவர் உயிரிழப்பு

91

 

பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒறுமோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பட்டானிச்சூர் அரச பாடசாலையினை அண்மித்த பகுதியில் நேற்று (21) மதியம் இடம்பெற்ற விப்த்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

மூன்று வாகனங்கள் விபத்து
வான், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ் விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவற்றில் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ் விபத்தல் துரைசாமி லலிதராசா என்பவரே உயிரிழந்தவராவர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

SHARE