மது விற்பனை நிலையத்திற்கு எதிராக போராட்டம்

129

 

நெடுந்தீவில் அமைந்துள்ள விடுதி ஒன்றினுள் மதுபான விற்பனை நிலையம் ஒன்றினை திறப்பதற்கு பிரதேச மக்கள் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று(22.04.2024) காலை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வேலை திட்டங்கள்
நெடுந்தீவு பகுதியில் பல்வேறு அபிவிருத்தி வேலை திட்டங்கள் முன்னெடுக்க வேண்டிய நிலையில் மதுபான விற்பனை நிலையத்தை கொண்டு வருவதால் இளம் சந்ததியினர் வழி தவறிப் போகக்கூடும் என்பதை கருத்தில் கொண்டு பிரதேச மக்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், மதத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பதாகைகளை தாங்கியவாறு கோஷமெழுப்பி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது நெடுந்தீவு சந்தியிலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டம், ஊர்வலமாக சென்று நெடுந்தீவு பிரதேச செயலரிடம் மனுவொன்றை கையளித்த பின்னர் அரசாங்க அதிபருடன் பேசி குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக பிரதேச செயலர் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டம் கைவிடப்பட்டுள்ளது.

SHARE