கோர விபத்து! காயமடைந்தவர்கள் குறித்து புதிய தகவல்

110

 

கார் பந்தய விபத்தில் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 7 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடும் காயங்களுக்குள்ளான இருவர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த மேலும் 11 பேர் பதுளை மற்றும் தியத்தலாவை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இராணுவ ஊடகப்பேச்சாளர் மேஜர் ஜெனரல் ரசிக குமார தெரிவித்துள்ளார்.

விபத்து தொடர்பான அறிக்கை
இதனிடையே, தியத்தலாவ விபத்து தொடர்பான அறிக்கை எதிர்வரும் மே மாதம் 10 ஆம் திகதி இராணுவத் தளபதியிடம் கையளிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் ஒருவரின் தலைமையில், தியத்தலாவை – ஃபொக்ஸ் ஹில் கார் பந்தய விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக இராணுவத்தினரால் 7 பேர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

இந்த குழு குறித்த சம்பவம் இடம்பெற்றமைக்கான காரணம், பொறுப்புக்கூற வேண்டியவர்கள், பார்வையிடுவதற்காக வருகை தந்தவர்களுக்கான பாதுகாப்பு உரிய முறையில் வழங்கப்பட்டதா போன்ற விடயங்கள் தொடர்பில் இந்த குழு ஆராயவுள்ளது.

SHARE