பயங்கர விபத்து… பாடசாலை மாணவிக்கு நேர்ந்த நிலை!

104

 

இராஜவரோதயம் வீதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி 15 வயது பாடசாலை மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து சம்பவம் நேற்றையதினம் (23-04-2024) இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வீதியை கடக்க முற்பட்ட போது வேனுடன் மோதுண்டதில் 15 அடி தூரமளவில் குறித்த மாணவி தூக்கி வீசப்பட்ட நிலையில் இவ் விபத்து இடம் பெற்றமை சிசிரிவி கானொளி மூலம் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பாக கண்டியை சேர்ந்த 32 வயதான வான் சாரதி திருகோணமலை தலைமையகப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த மாணவி திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

குறித்த விபத்துக்குள்ளான வேனை பொலிஸார் கைப்பற்றியதாகவும் கைதான சாரதியை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

SHARE