ரொறன்ரோ வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

95

 

ரொறன்ரோ வாடகை குடியிருப்பாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியொன்று வெளியிடப்பட்டுள்ளது.

ரொறன்ரோவில் சராசரி வீட்டு வாடகைத் தொகை தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

rentals.ca என்ற இணைய தளம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.இந்த மாதத்தில் வாடகைத் தொகையானது கடந்த மாதத்தை விடவும் 0.7 வீதமாக குறைவடைந்துள்ளது.

இதன்படி இந்த மாதத்தில் சராசரி வாடகைத் தொகையானது 2782 டொலர்களாக பதிவாகியுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் முதலே வாடகைத் தொகையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

எவ்வாறெனினும், கனடாவில் வாடகைத் தொகை மிகவும் அதிகமான நகரங்களில் ஒன்றாக ரொறன்ரோ திகழ்கின்றது என தெரிவிக்கப்படுகின்றது.

ரொறன்ரோவில் ஒரு படுக்கை அறையைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 2489 டொலர்கள் எனவும் இரண்டு படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 3270 டொலர்கள் எனவும் மூன்று படுக்கை அறைகளைக் கொண்ட வீடு ஒன்றின் சராசரி வாடகைத் தொகை 3728 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE