வெளிநாடொன்றில் நீர்வீழ்ச்சியில் விழுந்து இந்திய மருத்துவ மாணவன் உயிரிழப்பு!

106

 

கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து இந்தியாவை சேர்ந்த மருத்துவ மாணவர் ஒருவர் உயிர்ழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனகாபல்லியை சேர்ந்த 20 வயதான தாசரி சந்து என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.

கிர்கிஸ்தான் நாட்டில் மருத்துவ படிப்பை படித்து வரும் தாசரி சந்து தனது நண்பர்களுடன் நீர்வீழ்ச்சிக்கு சென்றார். அப்போது மாணவர் தாசரி சந்து எதிர்பாராதவிதமாக உறைந்த நீர்வீழ்ச்சியில் விழுந்து உயிரிழந்தார்.

சந்துவின் குடும்பத்தினர் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் தங்கள் மகனின் உடலை இந்தியா கொண்டு வர உதவுமாறு கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து அமைச்சர் கிஷன் ரெட்டி கிர்கிஸ்தான் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசினார். மாணவரின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றனர்.

 

SHARE