ரச்சிதா, தமிழ் சின்னத்திரையை தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லை.
விஜய்யில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி 2வது சீசனில் மீனாட்சியாக நடித்து மக்களின் பேராதரவை பெற்றார்.
அந்த தொடர் கொடுத்த வரவேற்பி தொடர்ந்து சில சீசன்கள் சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்க பின் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடிக்க வந்தார்.
விஜய் டிவி தாண்டி சன், ஜீ மற்றும் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்தவர் அப்படியே மீண்டும் விஜய் டிவி பக்கம் சென்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் தனது கணவரும், சீரியல் நடிகருமான தினேஷை பிரிந்துவிட்டதை உறுதிப்படுத்தி இருந்தார். வெளியே வந்தவர் சொந்த பிரச்சனையால் நிறைய சவால்களை சந்தித்திருக்கிறார்.
சமீபத்தில் அவரது அப்பாவும் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார்.
பிறந்தநாள்
தனது அம்மாவுடன் வாழ்ந்து வரும் ரச்சிதா புதிய சீரியலில் கமிட்டாகி இருக்கும் செய்தி வெளியானது. அதோடு சில நாட்களுக்கு முன் புதிய வீடு ஒன்றையும் வாங்கியிருக்கிறார், அந்த வீடியோவையும் அவரே பதிவிட்டார்.
இந்த நிலையில் புதிய வீடு வாங்கிய கையோடு நடிகை ரச்சிதா தனது பிறந்தநாளை அம்மாவுடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களையும் அவரே தனது இன்ஸ்டாவிலும் பதிவிட்டுள்ளார்.