இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியம்

136

 

இலவங்கப்பட்டை ஏற்றுமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் இலத்திரனியல் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியம் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் சீன சிறு மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் சங்கத்துக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (25) நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, வாகன உற்பத்தி, விவசாய தொழில்நுட்பம், காகிதம் மற்றும் அச்சிடுதல் தொடர்பான துறைகளில் விரிவாக்கம் மற்றும் வர்த்தக முதலீடுகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தொழில் வளர்ச்சி முதலீடு

இதன்போது பிரதமரின் சீன விஜயம் குறித்து சீன மக்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், இந்த விஜயத்திற்கு தனது நன்றியையும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் சூரிய ஆற்றல், காற்றாலை மற்றும் உயிரி எரிசக்தி தொடர்பான தொழில்களின் வளர்ச்சியில் முதலீடு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் CASMCE சங்கத்தின் துணைத் தலைவர் Xu Xiang, கூறியுள்ளார்.

SHARE