கர்ப்பமாக இருக்கும் நடிகை அமலா பாலின் அம்மா, அப்பாவை பார்த்துள்ளீர்களா.. அழகிய குடும்ப புகைப்படம் இதோ

108

 

தென்னிந்திய சினிமாவில் திறமையான நடிகைகளில் ஒருவர் அமலா பால். இவர் கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் ஜகத் தேசாய் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுடைய திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இதன்பின் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார் அமலா பால். திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமின்றி ரசிகர்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

இன்ஸ்டாராம் பக்கத்தில் தொடர்ந்து தனது காதல் கணவருடன் பதிவுகளை வெளியிட்டு வருகிறார். கர்ப்பமாக இருக்கும் அமலா பால் நடிப்பில் கடைசியாக ஆடுஜீவிதம் திரைப்படம் வெளிவந்தது.

தான் கர்ப்பமாக இருக்கும் இந்த நேரத்தில், படத்தின் ப்ரோமோஷன் வேளைகளில் பங்கேற்று கொண்டார். மேலும் தற்போது அமலா பால் கைவசம் இரு திரைப்படங்கள் உள்ளன.

அமலா பாலின் அம்மா, அப்பா
1991ஆம் ஆண்டு அனீஸ் பால் மற்றும் பால் வர்கீஸ் எனும் தம்பதிக்கு பிறந்தவர் தான் நடிகை அமலா பால். ரசிகர்கள் பலரும் அமலா பாலின் பெற்றோர்களை பார்த்திருக்க வாய்ப்பில்லை.

இந்த நிலையில், அமலா பாலின் பெற்றோர்களின் புகைப்படம் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் அமலா பால் தனது அம்மா, அப்பா மற்றும் சகோதரருடன் இருக்கிறார்.

SHARE