சிங்கபுர பிரதேசத்தில் அன்னையர் தின கொண்டாட்டத்திற்காக சென்ற தாய்: குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

114

 

வெலிகந்த, சிங்கபுர பிரதேசத்தில் கால்வாயில் விழுந்த குழந்தையொன்று சுமார் இரண்டு கிலோமீற்றர் தூரம் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் நேற்று (26.04.2024) இரவு இடம்பெற்றுள்ளது.

வெலிகந்த, ஜயவிக்ரமகம மஹாவலி சிங்கபுர பகுதியினை சேர்ந்த ஜயநாத் பண்டார என்ற 2 வயது குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

அன்னையர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொள்வதற்காக தாய் குழந்தையை மூத்த மகளிடம் ஒப்படைத்துவிட்டு சென்றிருந்த போது இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.

பிரேத பரிசோதனை
இதன்போது வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக பொலன்னறுவை மரண விசாரணை அதிகாரியிடம் ஒப்படைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வெலிகந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குழந்தை விபத்துக்குள்ளான வேளையில் தந்தை தோட்டத்திற்கு பின்புறம் உள்ள மாட்டு கொட்டகைக்கு சென்றுள்ளதுடன், மூத்த சகோதரி சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE