ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை ஜோதிகா.
திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து விலகி இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார்.
சமீபத்தில் ஜோதிகா, ஹிந்தியில் சைத்தான் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.
தற்போது ஹிந்தியில் ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை துஷார் இயக்கிவுள்ளார். இப்படம் அடுத்த மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
பேட்டி
இந்நிலையில் இயக்குனர் துஷார், ஸ்ரீகாந்த் படத்தில் ஜோதிகா நடித்தது குறித்து பேசியுள்ளார். அதில் அவர் கூறியதாவது, ஜோதிகா ஒரு சிறந்த நடிகை, அவர் முதல் முதலில் ஸ்ரீகாந்த் படத்தில் நடிக்க விரும்பவில்லை. அதன் பின்னர் சூர்யா சார் ஸ்ரீகாந்த் படத்தின் கதையை படித்துவிட்டு ஜோதிகா படத்தில் நடிக்க வைத்தார் என்று கூறியுள்ளார்.