Goat திரைப்படம் மாபெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வருகிறது. தளபதி விஜய் மற்றும் வெங்கட் பிரபு கூட்டணி முதல் முறையாக இப்படத்தில் இணைந்துள்ளது.
சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும் மோகன் இப்படத்தின் வில்லன் என கூறப்படுகிறது. நடிகை திரிஷா இப்படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடியுள்ளாராம்.
சமீபத்தில் தான் Goat படத்திலிருந்து முதல் பாடல் விசில் போடு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வெளிவந்த இப்பாடல் இதுவரை 47 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.
இரண்டாவது பாடல்
இந்த நிலையில், விசில் போடு பாடலின் வைப் இன்னும் குறையாமல் இருக்கும் நிலையில், Goat படத்திலிருந்து இரண்டாவது பாடல் குறித்து இயக்குனர் வெங்கட் பிரபு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார்.
ரசிகர்களுடன் சமூக வலைத்தளத்தில் பேசி வந்த இயக்குனர் வெங்கட் பிரபு, Goat படத்தின் டீசர் குறித்து முதலில் ரசிகர்கள் ஒரு கேள்வி எழுப்பினார். “படம் வெளிவருவதற்கு முன் டீசர் வெளியாகும், படத்தின் ரிலீஸ் எப்போது என உங்களுக்கே தெரியும்” என்றார்
பின் இரண்டாம் சிங்கிள் எப்போது என ரசிகர்கள் கேள்வி எழுப்ப, அதற்கு “ஜூன் மாதம்” என கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது வைரலாகி வருகிறது.