IPLயில் விளையாடுவது எனக்கு அதிர்ஷ்டம்: CSKக்கு எதிராக ருத்ர தாண்டவமாடிய வீரர்

632

 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரை மிகவும் விரும்புவதாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்டோய்னிஸ் சதம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 63 பந்துகளில் 124 ஓட்டங்கள் விளாசினார்.

இதன்மூலம் நடப்பு தொடரில் லக்னோ அணி இரண்டாவது முறையாக சென்னை அணியை வீழ்த்தியது.

போட்டிக்கு பின்னர் பேசிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் (Marcus Stoinis) அவுஸ்திரேலிய அணியில் தனக்கான இடம் குறித்து பேசினார்.

கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க
அப்போது அவர் கிரிக்கெட் அவுஸ்திரேலியாவின் மத்திய ஒப்பந்தப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டாலும், டி20 உலகக்கிண்ண தொடருக்கு பின்னர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையை நீட்டிக்க உறுதியாக இருப்பதாக கூறினார்.

மேலும் அவர் தனது ஒப்பந்தம் குறித்து பேசும்போது, ”எனக்கு ஒரு ஒப்பந்தம் கிடைக்கவில்லை என்பதை சிறிது காலத்திற்கு முன்பே அறிந்தேன். இளம் வீரர்களுக்கு வழிவிட்டு, எனது இடத்தைப் பிடிக்க வைப்பது மிகவும் நல்லது என்று நான் நினைக்கிறேன்.

ஒப்பந்தப் பட்டியலில் நான் முற்றிலும் நன்றாக இருக்கிறேன். ஆனால், விளையாடும் முன்னணியில் நான் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். அதனால் தான் ஐபிஎல் தொடரில் இருப்பது எங்களுக்கு, குறிப்பாக எனக்கு மிகவும் அதிர்ஷ்டம் மற்றும் மிகவும் விரும்புகிறேன்” என தெரிவித்தார்.

 

SHARE