அதிர்ச்சி தோல்வியால் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மேலாளர்

429

 

லிவர்பூல் அணி அதிர்ச்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து மேலாளர் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

லிவர்பூல் தோல்வி
பிரீமியர் லீக் (Premier League) தொடர் போட்டியில், லிவர்பூல் அணி (Liverpool) புள்ளிப்பட்டியலில் 16வது இடத்தில் இருக்கும் எவர்டோன் (Everton) அணியுடன் மோதியது.

இப்போட்டியில் எவர்டோன் அணி 2-0 என்ற கணக்கில் லிவெர்பூலை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது. இதனைத் தொடர்ந்து லிவர்பூல் அணியின் மேலாளர் ஜுர்கென் க்ளோப் (Jurgen Klopp) ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டார்.

மன்னிப்பு
அவர் கூறுகையில், ”இன்று மக்களிடம் (ரசிகர்கள்) மன்னிப்பு கேட்க வேண்டும். இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. எவர்டோன் விரும்பிய விளையாட்டை நாங்கள் விளையாடினோம், அவர்கள் Set Piecesயில் இருந்து இரண்டு கோல்களை அடித்தனர்.

நாங்கள் சிறப்பாக செய்திருக்க வேண்டும், ஆனால் நாங்கள் செய்யவில்லை. நல்ல எண்ணங்கள் எதுவும் இல்லை. இது போதுமானதாக இல்லை” என்றார்.

புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள லிவர்பூல் அணி 34 போட்டிகளில் 22 வெற்றிகளை பெற்றுள்ளது. மேலும் 74 புள்ளிகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE