கோட் சூட்டில் அச்சு அசல் விஜய் போலவே இருக்கும் மகன் சஞ்சய்.. புகைப்படத்தை பாருங்க

538

 

தளபதி விஜய் தற்போது Goat திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்ப்பில் இப்படம் உருவாகி வருகிறது. இதை தொடர்ந்து தனது கடைசி படமான தளபதி 69ல் நடிக்கவுள்ளார். இப்படம் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

ஆனால், ஹெச். வினோத் இப்படத்தை இயக்கப்போகிறார் என உறுதியாக கூறப்பட்டு வருகிறது. அதே போல், சமந்தா மற்றும் கீர்த்தி சுரேஷ் இப்படத்தில் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

கோட் சூட்டில் சஞ்சய்
நடிகர் விஜய்யின் மூத்த மகன் சஞ்சய் சமீபத்தில் சினிமாவில் அறிமுக இயக்குனராக என்ட்ரி கொடுத்தார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் நடிகர், நடிகைகளை தேர்தெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அறிவிக்கப்படும் என்கின்றனர்.

இந்த நிலையில், சஞ்சய் கருப்பு நிற கோட் சூட் அணிந்திருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள், கோட் சூட்டில் பார்க்க அச்சு அசல் அப்படியே விஜய் போலவே இருக்கிறார் சஞ்சய் என கூறி வருகிறார்கள். மாஸ்டர் பட இசை வெளியிட்டு விழாவில் விஜய் கருப்பு நிற கோட் சூட்டில் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE