மூன்று நாட்களில் ரத்னம் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

455

 

கடந்த வாரம் தமிழ் சினிமாவில் இருந்து திரைக்கு வந்த படம் ரத்னம். விஷால் – ஹரி கூட்டணியில் உருவான இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.

தாமிரபரணி, பூஜை என இரண்டு வெற்றி திரைப்படங்களை கொடுத்த விஷால் – ஹரி கூட்டணியில் இருந்து ரத்னம் படம் வெளிவந்ததால், இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர்.

வசூல் விவரம்
ஓரளவு நல்ல வரவேற்பை பெற்று வரும் விஷாலின் ரத்னம் திரைப்படம் மூன்று நாட்கள் முடிவில் செய்துள்ள வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் உலகளவில் கடந்த மூன்று நாட்களில் ரூ. 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.

ஆனால், இது இப்படத்திற்கு கிடைத்துள்ள குறைவான வசூல் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. இனி வரும் நாட்களில் இப்படம் எந்த அளவிற்கு வசூல் செய்யும் என பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE