அந்த விஷயத்திற்காக நயன்தாராவை அழைத்த சூப்பர்ஸ்டார் படக்குழு.. நடிகை என்ன செய்தார் தெரியுமா

499

தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது பாலிவுட் பக்கமும் நயன்தாராவின் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஜவான் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு பாலிவுட்டில் பட வாய்ப்புகள் வருவதாக கூறுகின்றனர்.

நயன்தாரா கைவசம் தற்போது டெஸ்ட் மற்றும் மண்ணாங்கட்டி ஆகிய திரைப்படங்கள் உள்ளன. இதில் டெஸ்ட் படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என தகவல் வெளியாகியுள்ளது

நடிகை நயன்தாரா முதன் முதலில் கதாநாயகியாக பாலிவுட்டில் நடித்த படம் என்றால் அது ஜவான் தான். இப்படத்தின் ஹீரோ பாலிவுட்டின் சூப்பர்ஸ்டார், கிங் கான் ஷாருக்கான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால், ஜவான் படத்திற்கு மும்பே ஷாருக்கானுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை நயன்தாரா பெற்றுள்ளார்.

வாய்ப்பை நிராகரித்த நயன்
ஆம், 2012ஆம் ஆண்டு ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சென்னை எக்ஸ்பிரஸ். இப்படத்தில் நடிகை பிரியாமணி 1234 எனும் பாடலுக்கு நடனமாடி இருப்பார். இந்த பாடலில் முதன் முதலில் நடனமாட விருந்தது நடிகை நயன்தாரா தானாம். ஆனால், நயன்தாரா அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.

2005ல் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த சிவகாசி, 2007ல் ரஜினியின் நடிப்பில் வெளிவந்த சிவாஜி மற்றும் சிவகார்த்திகேயனின் எதிர்நீச்சல் ஆகிய படங்களில் ஒரே ஒரு பாடலுக்கு நடிகை நயன்தாரா நடனமாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE