இலங்கையில் குறைவடைந்த தொழிலாளர் எண்ணிக்கை: மத்திய வங்கியின் அறிவிப்பு

833

 

இலங்கையில் தொழிலாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களாக, “2022 ஆம் ஆண்டில் பொருளாதார ரீதியாக 8.54 மில்லியனாக இருந்த தொழிலாளர் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.40 மில்லியனாகக் குறைவடைந்துள்ளது.

தொழிலாளர் பங்களிப்பு விகிதம் 2022 ஆண்டில் 49.8 சதவீதத்திலிருந்து 2023 ஆண்டில் 48.6 சதவீதமாக குறைந்துள்ளது.

வேலையின்மை விகிதம்
வேலையற்ற மக்கள் தொகை மற்றும் தொழிலாளர் எண்ணிக்கையில் ஏற்பட்ட சரிவு ஆகியவற்றின் ஒருங்கிணைந்த விளைவின் காரணமாக, வேலையின்மை விகிதம் முந்தைய ஆண்டை விட 2023 ஆண்டில் 4.7 சதவீதமாக மாறாமல் உள்ளது.

2022 ஆம் ஆண்டில் 0.399 மில்லியனாக இருந்த வேலையில்லாத மக்கள் தொகை 2023இல் 0.39 மில்லியன் வரை சிறிதளவு குறைந்துள்ளது.

அத்துடன், 2022 இல் 8.14 மில்லியனாக இருந்த வேலைவாய்ப்பாளர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 8.01 மில்லியனாக வீழ்ச்சியடைந்துள்ளது.“ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE