70 போதை மாத்திரைகள் மற்றும் மாபாவுடன் இளைஞர் கைது!

990

 

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் 70 போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபாவுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் நேற்று (28) தெரிவித்தனர்.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் வவுனியா தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையில் திடீர் சோதனை முன்னெடுக்கப்பட்ட போது அப்பகுதியில் உள்ள சிறிய கடை ஒன்றில் வைத்து போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாபா விற்பனை செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டது.

இதன்போது, குறித்த கடையில் இருந்து 70 போதை மாத்திரைகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதுடன் கிராம் கஞ்சா கலந்த மாபாவும் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வியாபார நிலைய உரிமையாளரான மகாறம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா தலமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

 

SHARE