திருகோணமலை மீடியா போரத்தின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மீடியா  போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக விருது – 2024

10

 

திருகோணமலை மீடியா போரத்தின் 5 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மீடியா  போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடக விருது – 2024 வழங்கும் விழாவும், பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வும்  கிண்ணியா பொது நூலக மண்டபத்தில் எதிர்வரும் (25) ஆம் திகதி மாலை 2.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.
போரத்தின் தலைவர் எச்.எம்.ஹலால்தீன் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவுக்கு பிரதம அதிதியாக கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.
மேலும், கிண்ணியா நகரசபை செயலாளர் முகம்மது அனீஸ் கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் இஷட்.எம்.எம்.நழீம், கிண்ணியாவை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட எம்.வி.எம்.பெளண்டேஷன் உரிமையாளர் எம்.வி.எம்.பெளமி உள்ளிட்ட உலமா சபை மற்றும் சூரா சபை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.
இதன்போது, கடந்த பல வருடங்களாக ஊடகத்துறைக்கு பெரும் பங்காற்றிய 43 ஊடகவியலாளர்கள் கௌரவிக்கப்பட்டு அவர்களுக்கு ஊடக விருதும் வழங்கி வைக்கப்படவுள்ளதாகவும் போரத்தின் செயலாளர் தெரிவித்தார்.
இதில் ஊடக விருது, சமூக தாரகை விருது, போரத்திற்கு தொடர்ச்சியாக செய்திகளை வழங்கிய மற்றும்  பிரதேசத்தில் நடக்கின்ற செய்திகளை உடனுக்குடன் வழங்கி வந்த மூன்று ஊடகவியலாளர்களுக்கு தங்கப் பதக்கம் அணிவிக்கப்பட்டு கெளரவிக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
SHARE