நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடிய போது யாரும் நினைத்திருக்கவில்லை

82

 

அஸ்வின் தன்னுடைய நூறாவது டெஸ்ட் போட்டியை விளையாடிய போது யாரும் நினைத்திருக்கவில்லை இன்னும் மேலதிகமாக 6 டெஸ்ட் போட்டிகள் தான் விளையாடுவார் என்று ,அது மாத்திரமல்லாமல் அஸ்வின் தன்னுடைய இறுதிக் காலத்தில் இருக்கிறார் என்று தன்னுடைய நூறாவது டிரஸ் போட்டியை விளையாடுகின்ற போது ஒரு வார்த்தை கூட யாரும் உச்சரித்திக்கவில்லை .
ஆனால் நியூசிலாந்து உடனான டெஸ்ட் தொடர் ஒட்டுமொத்தமான கேரியரையும் புரட்டி போட்டு விட்டது என்று சொல்லலாம்.
உள்ளூரிலே அடைந்த மோசமான தோல்வி அஸ்வின் எதிர்காலம் தொடர்பிலே சிந்திக்க செய்தது, அது மாத்திரமல்லாமல் அணிக்குள் திடீரென கொண்டுவரப்பட்ட வாஷிங்டன் சுந்தர் தொடரில் தன்னுடைய திறமையை அற்புதமாக வெளி காட்டினார்.
ஒரு இளம் வீரர் ஒருவர் அணிக்குள்ளே வந்து திறமையை வெளிக்காட்டுகின்ற போது, தொடரையும் தாங்கள் இழந்து இருக்கின்ற போது, வயது 38 நெருங்குகின்ற போது, அஸ்வின் சுயமாகவே தீர்க்கமான முடிவை எடுத்திருக்கிறார்.
125 டெஸ்ட் போட்டிகளாவது அஸ்வின் ஆடுவார் என்று சொல்லித்தான் எல்லோரும் எண்ணிக் கொண்டிருந்தோம், ஆனால் அஸ்வின் விரைவாகவே விடை பெற்று இருக்கிறார்
ஆஸ்திரேலியா தொடரின் இடைநடுவே விடை பெற்று தனியாக நாளைய நாள் அஸ்வின் இந்திய நோக்கி புறப்படுகிறார் என்பதையும் ரோகித் சர்மா இப்போது உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இன்றைய நாள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் ஜீரணிக்க முடியாத ஒரு நாளாக இருக்கிறது
SHARE