“TNA”மக்கள் கட்சியின் எதிர்காலம் என்ன?
> தலைவரினால் பெரும் விருட்சமாக கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் இன்றைய நிலை என்ன??
> தலைவரினால் பெரும் விருட்சமாக கட்டியெழுப்பப்பட்ட கட்சியின் இன்றைய நிலை என்ன??
> ஆயுத போராட்டம் மவுனிக்கப்பட்ட பின்னர் திக்கு திசை இல்லாதவர்களினால்,தங்களின் தனிப்பட்ட குரோதங்களினால்,தங்களது சுயநலத்துக்காக,கட்சியின் தலைமைத்துவம் இன்மையால் இக்கட்சியிருந்து எத்தனை பெரும் அரசியல்வாதிகள்,மூளைசாளிகள்,தேசியத்தின்பால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள் வெளியேறி உள்ளவர்கள்??
> இப்போது கட்சியின் பெரும் பதவியில் இருப்பவர்கள் எத்தனை பேர் பின் கதவால் வந்தவர்கள் அல்லது வேறு கட்சியில் இருந்து வந்தவர்கள் சகல விடயங்களும் அன்பான தொண்டர்களுக்கும்,மக்களுக்கும் தெரியும்
> தமிழ் மக்களின் பெரும் கட்சி இக்கட்சியாகும்… உங்களின் பெரும்கூட்டங்களில் மக்களின் நலன் சார்ந்த விடயங்கள்,தமிழ் இளைஞர்களின் எதிர்காலங்கள் பற்றி,19 நூற்றாண்டு நடுப்பகுதியில் உருவாக்கப்பட்ட கட்சியின் எதிர்கால நிலைப்பாடுகள் பற்றி ஏதாவது கதைத்ததுண்டா?? ஊடகங்களில் அந்த செய்திகள் வருவதில்லை.செய்திகளின் சுவைகள் இப்படி இருக்கும்… சட்டதிட்டம் சம்மந்தமாக,நீதிமன்றம் சம்மந்தமாக,தலைவர்கள் சம்மந்தமாக,கட்சிக்கு பாடுபட்டவர்களை அல்லது இவ்வளவு காலம் பாடுபட்வர்களை எவ்வாறு நீக்குவது பற்றி சம்மந்தமாக,மக்களின் ஒருமித்த தேசிய நலன்களுக்காக தேர்தல்களில் பங்களிப்பு செய்தவர்களை சட்டத்தின் ஊடாக என்ன செய்யலாம்!!!