ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில்    பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்

81

 

ஊடக அறிக்கை
ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில்    பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் நேரடி அரசியல் தலையீடுகள் மூலமும் அதிகாரிகள் சிலரின் தலையீடுகள் மூலமும் ஆசிரியர்களுக்கு இடமாற்றத்தில் பாகுபாடுகள் காட்டப்பட்டன் இன்று மறைமுகமாக தமிழ் அரசியல் வாதிகள் சிலரை முகவர்களாக வைத்துக்கொண்டு, ஆசிரியர் இடமாற்றத்தில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றச் சபையைச் சுயாதீனமாக செயற்பட விடின், பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கடந்த காலங்களைப்  போல அரசாங்கத்துக்கு எதிராக போராட வேண்டி சூழ்நிலை எற்பாடும்.
2007ஃ20 என்னும் இலக்கத்தை உடைய தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கை பிரகாரம் வடக்கு மாகாணத்தில் இடமாற்றம் நடைபெறுவதில்லை. செல்வாக்கு மிக்கவர்கள் சிலர் ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கு மேல் கடமையாற்றுகின்றார்கள். 3;:4 படி 1 பகுதியில் 55 வயதைத் தாண்டிய ஆசிரியர்களுக்குத்தான் அவர்களின் கோரிக்கையைத் தவிர இடமாற்றங்களை மேற்கொள்ளக்கூடாது. ஆனால், வடக்கு மாகாணத்தில் அவ்வாறு நடைபெறாது அதிகாரிகளும் அரசியல் வாதிகளும் தங்களது சுயலாபத்திற்காக வயதைத் தீர்மானிக்கின்றனர். இதனால், புதிதாக நியமனம் பெறும்; பெற்ற ஆசிரியர்கள் பாதிப்படைவதுடன், மன உளைச்சலுக்கும் உள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக மாணவர்களின் கல்வி அடைவுமட்டத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் 5 வருடங்களுக்குக் குறைய வெளிமாவட்டங்களிலும் கடல் கடந்த தீவுகளிலும் சேவையாற்றியவர்கள் பலர் உள்ளனர். இதனை சரியான பொறிமுறையின் படி நடைமுறைப்படுத்த வேண்டும்.
தேசிய ஆசிரியர் இடமாற்றக் கொள்ளை படி, முதல் நியமனக் கடிதத்தில் குறைந்தபட்ச கால எல்லையைக் குறித்த பாடசாலையில் சேவைக்காலத்தைப் பூர்த்திசெய்ததன் பின்னர் அவ்வாசிரியர் தாம் விரும்பிய பாடசாலைக்கு இடமாhற்றம் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கவேண்டும். (தேசிய கொள்கை 3:4 இல் 3 இலக்க படி) வடக்கு மாகாணத்தில்  பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் நீதிமன்றை நாடினால், தேசிய கொள்கையே ஏற்றுக்கொள்ளப்படும் என்பது நிதமர்சனமாகும். வடக்கு மாகாணத்தில் கல்வியில்  நீண்ட கால திட்டமிடல் இன்மையே இவற்றுக்கெல்லாம் காரணமாகும். பாதிக்கப்பட்ட அதிபர்கள் ஆசிரியர்கள் பலர் இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட – உரிய – தரப்பினருக்கு எமது சங்கம் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு, எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றத்தி;ல் பாராபட்ச நிலையை நீக்கா விடின் வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட ஆசிரியர் வீதியில் இறங்கி போராட வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் தெரிவித்துக்கொள்கின்றது

பெ.ஸ்ரீகந்தநேசன்,
(புயல்நேசன்)
பொதுச்செயலாளர்,
இலங்கை தாய்மொழி ஆசிரியர் சங்கம்.

SHARE