ஐஸ் போதைப்பொருளுடன் கைதான இருவரிடம் மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய இருவரை சம்மாந்துறை பொலிஸார் வியாழக்கிழமை(2) மாலை கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் நடமாடிய இருவரை சம்மாந்துறை பொலிஸார் வியாழக்கிழமை(2) மாலை கைது செய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நீண்ட காலமாக ஐஸ் போதைப் பொருட்களை பொதி செய்து வியாபாரம் செய்து வந்த இரு சந்தேக நபர்களே கைதாகினர்.
கைதான 27 மற்றும் 40 வயதுடைய இரு சந்தேக நபர்களும் கருவாட்டுக்கல், உடங்கா பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸாரின் விசாரணையில் வெளியாகியுள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் வசமிருந்து 4200 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டிருந்தது.
அத்துடன் சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எஸ் ஜெயலத்தின் வழிகாட்டுதலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி கே.சதீஸ்கர் தலைமையிலான பொலிஸார் சந்தேக நபர்கள் உள்ளிட்ட சான்றுப்பொருட்கள் என்பன சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
பாறுக் ஷிஹான்