5000 வறிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு

57

 

5000 வறிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க ஏற்பாடு-முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி துல்கர் நயீம் (துல்சான்)
 

அம்பாறை மாவட்டத்தில் 5000 வறிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படை எண்ணப்பாட்டுடன் இருக்கின்றவர்.நாபீர் நற்பணி மன்ற ஸ்தாபகர் உதுமாண்கட்டு நாபீர். இவ்வாறான விடயங்களை  விரைவாக முன்னெடுப்பதற்கு அரசியல் அதிகாரம் அவசியமாகும்.அத்துடன் தொழில் பேட்டைகளை அமைத்து இதர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியிலும் அவர்  ஈடுபட்டு வருகின்றார்.இது தவிர வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வீட்டுத்திட்டங்களை அமைத்து கொடுக்கும் நடவடிக்கையிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.இதற்கெல்லாம் அரசியல் அதிகாரமானது இன்றி அமையாதது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான   துல்கர் நயீம் (துல்சான்)   தெரிவித்தார்.

நாபீர்  நற்பணி மன்றத்தின் அம்பாறை மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று  ஈ.சி.எம். நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில்  நடைபெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அங்கு கருத்து தெரிவிக்கையில்

எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் 5000 வறிய குடும்பத்தை சேர்ந்த இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற அடிப்படை எண்ணப்பாட்டுடன் இருக்கின்றவர்.நாபீர் நற்பணி மன்ற ஸ்தாபகர் உதுமாண்கட்டு நாபீர். இவ்வாறான விடயங்களை  விரைவாக முன்னெடுப்பதற்கு அரசியல் அதிகாரம் அவசியமாகும்.அத்துடன் தொழில் பேட்டைகளை அமைத்து இதர வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியிலும் அவர்  ஈடுபட்டு வருகின்றார்.இது தவிர வெளிநாட்டு முதலீட்டாளர்களை கொண்டு வீட்டுத்திட்டங்களை அமைத்து கொடுக்கும் நடவடிக்கையிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.இதற்கெல்லாம் அரசியல் அதிகாரமானது இன்றி அமையாதது.எனவே இவ்வாறான மக்கள் செவகர்களை மக்கள் இனங்கண்டு  எப்படி பாராளுமன்றம் அனுப்புவது நாபீர்  நற்பணி மன்றத்தினை அரசியல் கட்சியாக மாற்றி எவ்வாறு முன்னோக்கி செல்வது போன்ற   விடயங்கள் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் அனைத்து பிரதேசங்களையும் உள்ளடக்கிய பிரமுகர்களை கொண்ட உயர்மட்ட ஆலோசனை சபை ஒன்றும் முடிவில் அமைக்கப்பட்டது. எதிர்காலத்தில் இன்னும் சமூக சிந்தனை உள்ள புத்திஜீவிகள் பலரும் உள்வாங்கப்பட்டு இந்த சபை இன்னும் விரிவாக்கப்படும் என தெரிவித்தார்.

அங்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி ஹாதி இஸ்மாயீல்  சம்மாந்துறை பிரதேசத்திலே பாராளுமன்ற பிரதிநிதித்துவம் ஒன்று கடந்த மூன்று நான்கு தசாப்தங்களாக வெற்றிடமாக காணப்படுகின்றது இங்கு ஆளுமை மிக்க ஒரு அரசியல் தலைமைத்துவம் இல்லாத காரணத்தால் இங்கே உள்ள வாக்குகள் பல்வேறு பக்கமும் பிரிந்து செல்கின்றது அதனால் எந்த பிரதிநிதித்துவத்தையும் பெற்றுக்கொள்ள முடியாமல் இருக்கின்றது எனவே சம்மாந்துறை பிரதேசத்திலே ஒரு ஆளுமை மிக்க அரசியல் பிரதிநிதித்துவம்  இல்லாமல் காணப்படுகின்றது. எனவே அதற்குப் பொருத்தமான ஒரு ஆளுமை மிக்க அரசியல் தலைமைத்துவத்தை நாங்கள் தெரிவு செய்ய வேண்டும் அந்த அரசியல் தலைமைத்துவத்தை நாங்கள் இன்று அடையாளம் கண்டிருக்கின்றோம். கடந்த பல வருடங்களாக, சுமார் 30 வருடங்களுக்கு மேலாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் சமூக சிந்தனையாளர் கலாநிதி நாபிர் அவர்களை நாங்கள் ஒரு சிறந்த தலைமைத்துவமாக இனங்கண்டு இருக்கின்றோம். எனவே அவருடைய கரங்களை பலப்படுத்தி அவரை ஒரு அரசியல் அதிகாரதில் அமர்த்த வேண்டும் இவர் ஒரு சமூக சிந்தனை உள்ள ஒரு சிறந்த மனிதர் இவரை நாங்கள் பாராளுமன்றத்துக்கு அனுப்பினால் நிச்சயமாக சம்மாந்துறை பிரதேசம் அரசியல் எழுச்சி பெற்று சமூக அபிவிருத்தியில் ஒரு சிறந்த சமூகமாக உயர்வடையும் என்பது நிச்சயம். எனவே எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலே போட்டியிடுவதற்கு ஏற்ற வகையிலே நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரு அரசியல் கட்டமைப்பை உருவாக்கி இந்த பிரதேச சபைகளை நாங்கள் கைப்பற்ற கூடிய சக்தியாக மாற வேண்டும் அதேபோல எதிர்காலத்திலே ஒரு கட்சியாக உருவாக்கப்பட்டு அம்பாறை மாவட்டத்தில் மட்டுமல்லாமல் ஏனைய மாவட்டங்களுக்கும் எங்களது கட்சியை பரவலாக்க வேண்டும் அது ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என  தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்முனை சட்டத்தரணிகள் சங்கத் தலைவரும் அரசியல் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி ஹாதி இஸ்மாயீல் அவர்களும் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டதுடன், மேலும் பல சட்டத்தரணிகளும் புத்தி ஜீவிகளும் கலந்துகொண்டு கருத்துரைகளை வழங்கினார்கள். அம்பாறை மாவட்டாத்தின்  ஒவ்வொரு பிரிவுகளையும் சேர்ந்த 50கும் மேற்பட்ட மாதர் சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்களும் பெரியநீலாவனை மருதமுனை, கல்முனை, சாய்ந்தமருது அட்டாளைச்சேனை,  அக்கரைப்பற்று, பொத்துவில் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த மாதர் சங்கங்களின் தலைவர் செயலாளர்கள் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்.

பாறுக் ஷிஹான்
SHARE