அஜீத்தின் ஆசை, கனவு, லட்சியம் அனைத்தும் ரேஸின் மீதே இருந்திருக்கிறது என்று சொல்லலாம். சினிமாவில் புகழ்பெற்ற நடிகனாக ஆன போதும், அவர் தனது முயற்சியை விடவில்லை

53

 

தனது 18வது வயதில் இருந்தே மோட்டார் சைக்கிள் ரேஸில் கலந்து கொள்ள வேண்டும் என்பது அஜீத்தின் கனவு. பல போட்டிகளில் கலந்து கொண்டாலும், விபத்துகள், காயங்கள் காரணமாக அவரால் அதில் தொடர முடியவில்லை. அதே நேரத்தில் நடிக்க வந்து விட்டதால், சினிமாவில் கிடைத்த வெற்றி அவரை ரேஸ் பக்கம் திரும்பவிடவில்லை. மேலும் சினிமா நடிகராக கிடைக்கும் புகழை விடவும், இதில் கிடைக்கும் ஊதியம் அஜீத்துக்கு மிக முக்கியமாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் என்பது மிக அதிக செலவு பிடிக்கும் ஒரு விளையாட்டு. எல்லோராலும் அதில் பங்கேற்க முடியாது. அதனால் தான் சினிமாவின் மூலம் தனது கனவை அடைய நினைத்திருக்கலாம்.
அஜீத்தின் ஆசை, கனவு, லட்சியம் அனைத்தும் ரேஸின் மீதே இருந்திருக்கிறது என்று சொல்லலாம். சினிமாவில் புகழ்பெற்ற நடிகனாக ஆன போதும், அவர் தனது முயற்சியை விடவில்லை. ஆரம்பத்தில் அவர் ரேஸிற்கு போகும் போது சில சங்கடங்கள் இருந்தன. ஆனால் தற்போது சினிமாவையும், ரேஸையும் சரியாக பாலன்ஸ் செய்து கொண்டுவிட்டார்.
தனது 32வது வயதில் மோட்டார் சைக்கிளை விட்டு கார் ரேஸ் பக்கம்கவனம் திருப்பினார். 2002-ல் ஆரம்பித்த இந்தப் பயணம் இன்று 2025-ல் சொந்தமாக ரேஸிங் டீம் ஓனராக அவரை மாற்றியிருக்கிறது.
இந்தியாவில் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள்
2003-ல் பி எம் டபிள்யூ ஆசியா சாம்பியன்ஷிப் போட்டியில் முழு சீசனையும் கம்பிளீட் செய்தார்.
2004-ல் பிரிட்டிஷ் பார்முலா 2 வகை பந்தயத்தில் ஸ்காலர்ஷிப் கிடைத்து பங்கேற்றார். ஆனால் அப்போது அதை முழுதாக முடிக்க முடியவில்லை.
தொடர்ச்சியான சினிமா கமிட்மெண்ட்கள். முழுமையாக ரேஸ் பக்கம் போக வேண்டும் என்றாலும், பொருளாதாரம் வேண்டும். அதற்கு சினிமாவில் நடித்தே ஆக வேண்டும். அதே சமயம் சினிமாவிலும் வந்து போகும் வேடங்களை மட்டும் அவர் செய்யவில்லை. தனது லட்சியத்திற்கான மூலதனத்தைக் கொடுக்கும் சினிமாவிற்கும், நிபந்தனையில்லாத அன்பை வாரி வழங்கும் ரசிகனுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தார். இதனால் தான் அவர் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். அது தான் இந்த சினிமாவிற்கும், அவரது ரசிகர்களுக்கும் அஜீத் செலுத்தும் நன்றிக்கடன்.
#Dubai24H என்று அழைக்கப்படும் பந்தயத்தில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக கார் ஓட்ட வேண்டும். இடையில் காரை மாற்றக் கூடாது. பழுது பார்த்துக் கொள்ளலாம். 2 மணி நேரத்திற்கு ஒரு முறை டயர் மாற்றிக் கொள்ளலாம். ஒரு அணியில் உள்ள வீரர்கள் மாறி, மாறி கார் ஓட்டிக் கொண்டே இருக்க வேண்டும். வெயில், மைழை, பனி எந்த எந்த வானிலையாக இருந்தாலும் நிற்க முடியாது. 24 மணி நேரத்தில் ரேஸ் கார்கள் 2500-3500 கிலோமீட்டர்கள் கடக்கும்போட்டி இது. அதில் தான் அஜீத் டீம் கலந்து கொண்டிருக்கிறது.
பயிற்சியின் போது விபத்து ஏற்பட்டதால், இந்த ரேஸில் அஜீத் கலந்து கொள்ளவில்லை என்று என்று சொல்லியிருக்கிறார்.
ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் முதல் மார்ச் மாதம் வரை ரேசிங் சீசன். அந்த காலகட்டத்தில் ரேஸில் கவனம் செலுத்திவிட்டு, மீதம் உள்ள 6 மாதங்களில் சினிமாவில் நடிக்கிறார்.
இனிமேல் வாழ்நாள் முழுவதும் வீல்சேர் தான் என்று சொல்லப்பட்ட ஒரு நபர், தனது மன வலிமையால், விடாமுயற்சியோடு, விஸ்வரூபமாக வளர்ந்து நிற்கிறார்.
உங்கள் கனவுகளை விடாமல் துரத்துங்கள். என்றேனும் ஒரு நாள் வானம் வசப்படும் என்று வாழ்ந்து காட்டுகிறார் அஜீத் எனும் பந்தயக்காரன்…
SHARE