ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக்காலத்தில் அமைச்சரவையின் அனுமதியின் பின்னரே தனக்கு உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலம் வழங்கப்பட்டதாக தெரிவித்துள்ள அவர் முன்னாள் ஜனாதிபதி என்ற அடிப்படையில் எனது பாதுகாப்பிற்காக அதனை வழங்கினார்கள் அரசமைப்பின் கீழ் எனக்குஅதற்கான உரிமையுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறுவதால் ஜனாதிபதிக்கு பலாபலன்கள் கிட்டும் என்றால் நான் அங்கிருந்து வெளியேற தயார் என குறிப்பிட்டுள்ள மகிந்த ராஜபக்ச நான் பலவந்தமாக அந்த வீட்டை பிடித்துவைத்திருக்கவில்லை அங்கிருந்து வெளியேற தயார் என குறிப்பிட்டுள்ளார்.
அனுரகுமாரதிசநாயக்க நாட்டின் ஜனாதிபதி என்ற போதிலும், அவர் எதிர்கட்சி அரசியல்வாதி போலநடந்துகொள்கின்றார் என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நான் மகிந்த ராஜபக்ச என்பதை அனுரகுமார திசநாயக்க மறந்துவிட்டார், அவரது பேச்சுக்கள் அரசியல் மேடைகளிற்கும் தேர்தல் காலத்தில் அவர் போலி வாக்குறுதிகளை வழங்கியதை போல மக்களை தவறாக வழிநடத்துவதற்கும் உகந்தவை என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ஜனாதிபதி எனக்கு எழுத்து மூல வேண்டுகோள் விடுத்தால் எனக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ வாசல்ஸ்தலத்திலிருந்து வெளியேற தயார் என்பதை நான்ஜனாதிபதிக்கு தெரிவிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.